பிரதான செயற்பாடுகள்
- அணைகளைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதன் மூலம் அணைக்கட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அணைகளை ஒழுங்காகப் பரிசோதிப்பதை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் வட கிழக்கு பருவப்பெயர்ச்சிக்கு தயாராதல்.
- அணை பாதுகாப்பு செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு வழிகாட்டல்களைத் தயாரித்தல்.
- அணைகளின் வரலாற்று நிகழ்வுகளையும் தொழில்நுட்ப தரவுகளையும் தொகுத்தல்.
- அணை செயற்பாட்டுக்கான நிலையியற் கட்டளைகளை மீழ்திருத்தங்கள் செய்தல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- அணைகளின் பாதுகாப்புக்கான பரிகார நடவடிக்கைகளை அமுலாக்குதல் மற்றும் ஆராட்சிகள், பரிசோதனைகள் என்பவற்றை மேற்கொள்ளுவதற்கு சிறப்பு பிரிவு, வெளி சேவை அமைப்புகள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களுடன் இணைப்பாக்கம் செய்துகொள்ளுதல்.
- அணை பாதுகாப்பு கிளையின் நதிபங்கீட்டின் கீழ் வருடாந்த வேலை நிகழ்ச்சியை கண்காணித்தல்.
- பெரிய அணைகள் பற்றிய சர்வதேச ஆணைக்குழுவின் சிபாரிசின் கீழ் பெரிய அணைகள் பற்றிய இலங்கை தேசிய குழு (SLNCOLD)வின் செயலகத்தைப் பராமரித்தல்.
சேவைகள்
- அணைக்கட்டுகளின் பிரதான கட்டமைப்புக்களின் பாதுகாப்பு பற்றி ஒழுங்கான பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையிடும் நடவடிக்கைமுறை பற்றிய நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 2013 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 4/2013ஆம் இலக்க சுற்றறிக்கையை இற்றைப்படுத்தி வழங்குதல்.
- செயல்முறைகளை வரிசைப்படுத்துவதற்கு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒவ்வொரு பிராந்தியத்தின் பாரிய அணைகள் பற்றி காலாண்டு பரிசோதனைகளை நடத்தி முன்னேற்றத்தை அவதானித்தல்.
- முன்னுரிமை பட்டியலுக்கு அமைவாக நிதிபங்கீட்டின்படி கீழ் அனைத்து பிராந்தியங்களுக்கும் ஒதுக்கீடுகளை வழங்குதல்.
- ஒழுங்காகவும் அவசர நிலைகளிலும் பாரிய மற்றும் நடுத்தர குளங்களின் வெளிக்கள பரிசோதனைகளை செய்தல்.
- பிராந்தியத்தின் அனைத்து வெளிக்கள் பணியாளர்களுடன் அணை பாதுகாப்பு விடயங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.
- வெளிநாட்டு நன்கொடை கருத்திட்டங்களின் கீழ் பிரதான பனிகளின் புனர்வாழ்வு வேலைகளை மேற்கொள்ளுதல்.
- பெரிய அணைகள் பற்றிய சர்வதேச ஆணைக்குழுவின் சிபாரிசின் கீழ் பெரிய அணைகள் பற்றிய இலங்கை தேசிய குழு (SLNCOLD)வின் அங்கத்தவர்களின் அறிவுறுத்தல்களின் செயலமர்வுகள், மகாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பவற்றை ஒழுங்கு செய்தல்.
பிரிவுத் தலைவர்
எந்திரி. Y.A.C.R.குமார
பிரதானா பொறியாளர் (அணை பாதுகாப்பு )
பிரதானா பொறியாளர் (அணை பாதுகாப்பு )
Office: +94-11-2502992
Mobile: +94-71-2027427
Fax: +94-11-2586326
e-maiil: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.