குறிக்கோள்கள்

சமூகத்திற்கு நீர் வளங்களின் சிறந்த பயன்களை வழங்குவதன் மூலம் நீர் வளங்களின் பல்வகை பயன்பாட்டின் சாத்தியக்கூற்றைப் பரிசோதித்தல் புதிய நீர் வளங்களின் அபிவிருத்திக்கு முன்மொழிவுகளை அடையாளம் காணுதல் கருத்திட்ட திட்டமிடல் என்பவை இந்த கிளையின் விடயப்பரப்பில் அடங்குகின்றன. பிரதான குறிக்கோளை அடைவதற்காக இந்த செயல்முறையில் விவசாயம், கைத்தொழில் மற்றும் உள்நாட்டு துறைகள் என்பவற்றின் எதிர்கால தேவைகளைக் கருத்திற் கொண்டு கருத்திட்ட திட்டமிடல் பிரிவு அதன் விடயப்பரப்புக்குள் புதிய கருத்திட்ட முன்மொழிவுகளை திட்டமிடுதல் மற்றும் உருவாக்குதல் என்பவற்றில் ஈடுபடுகிறது.

செயற்பாடுகள்

  • புதிய நீர் வளங்கள் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூற்று ஆய்வுகளையும் சாத்தியக்கூற்று ஆய்வுகளையும் நடத்துதல்.
  • அடையாளம் காணப்பட்ட கருத்திட்டங்கள் பற்றிய நீர் வளங்கள் பகுப்பாய்வு.
  • பாரிய நீர்ப்பாசன நீர் வழங்கள், நீரால் இயங்கும் மின்சக்தி, வெள்ள கட்டுப்பாடு, மற்றும் காணி மீட்டல் கருத்திட்டங்கள் என்பவற்றின் கருத்திட்ட உருவாக்கம் மற்றும் விரிவாக வடிவமைத்தல்.
  • பாரிய கருத்திட்டங்களின் கீழ் கால்வாய் முறைமைகளுக்கும் பிரதான பணிகளுக்கும் நிர்மாண வரைபடங்களை தயாரித்தல் மற்றும் வடிவமைத்தல்.
  • சூழலியல் தாக்க மதிப்பீட்டு அணியுடன் (EIA) மற்றும் அவற்றின் விதிமுறைகளுடனும் கூட்டிணைந்து நிர்ப்பாசன திணைக்கள கருத்திட்டங்களின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) செயற்பாடுகளைத் தயாரித்தல்.
  • ஏனைய முகவர் நிலையங்களின் தேவைக்கு ஏற்ப ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
    கருத்திட்ட முகாமைத்துவ திட்டத்தைத் தயாரித்தல்.

பிரிவுத் தலைவர்

Eng Sarath Perera
பொறி.எல்.ஜி. ஆனந்த எதிரிசிங்க
நீர்ப்பாசன பணிப்பாளர் (கருத்திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தல்)
+94 112 055 879
+94 718 077 059
+94 112 507 825