வவுனியா / மன்னார் நீர்ப்பாசனப் பிரதேசம் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களைக் கொண்டுள்ளது. பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று நீர்ப்பாசன பொறியாளர் பிரிவுகள் அமைந்துள்ளன. இப்பிரிவுகள் வவுனியா, முருங்கன் மற்றும் சிலாவத்துறை. இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் மேற்பார்வையின் கீழ் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் பிரிவுகள் மேலும் பல நீர்ப்பாசன அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயச் சமூகத்தினருக்குப் பராமரிப்புச் செயற்பாடுகளை திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த பாசனப் பகுதியின் மொத்த நீர்ப்பாசனப் பகுதி 46,170 ac. இது 10 நீர்ப்பாசனத் திட்டங்களில் உள்ளது.
திட்டப் பட்டியல்
பிராந்தியத்தின் தலைவர்
நீர்ப்பாசன பணிப்பாளர்
நீர்ப்பாசன திணைக்களம்,
செம்மண்தீவு,
முருங்கன், மன்னார்.