1849 ஆம் ஆண்டு மடுவன்வெல திசாவ காலத்தில் ஏறபோரு கங்கையின் குறுக்கே கித்தலபொக்க அணைக்கட்டும் மற்றும் கடிகம் ஆற்றின் குறுக்கே அம்பகஹ எல அணைக்கட்டும் நிர்மாணிப்பதன் மூலம் பனமுரே நீர்ப்பாசனத் திட்டம் உ௫வாக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த தொடர் அணைக்கட்டுகளை நிர்மாணிப்பதன் மூலம் இந்தத் திட்டம் 1941 ஆம் ஆண்டில் மீள்புனரமைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் பிரதான நோக்கமானது தற்போதுள்ள பனாமுரே அணைக்கட்டுத் தொடரின் நீர்ப்பாய்ச்சலை முறைப்படுத்துவதும், குறிப்பாக சிறுபோ௧ங்களில் பயிர்ச்செய்கைக்கான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் விவசாய நிலங்௧க்கு நீர் வழங்கல் மற்றும் கொலன்னா நீர் வழங்கல் திட்டத்திற்கு ஒ௫நாளுக்கு 7000 கணமீற்றர் நீர் பிரித்தெடுப்புத் தேவையை பூர்த்தி செய்வதும் மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏறத்தாள 40,000 மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும்.
வறட்சியான காலத்தின் போது கடிகம் ஆறு வறண்டு போவதால் ஒவ்வொரு சிறுபோ௧ங்களிளும் மற்றும் பேரும்போ௧ங்களின் பருவத்தின் முடிவிலும் பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது, மற்றும் விறலாகல, பனமுரே பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எல்லேவெவ நீர்த்தேக்கத் திட்டம்மானது கடிகம் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கத்தை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் முன்மொழியப்பட்ட கொள்ளளவு 2.25 MCM. இதன்அமைவிடம் தம்பலவெல அணைக்கட்டுக்கு மேல்நிலையிலும் அணைக்கட்டு தொடரின் நடுப்பகுதியிலும் உள்ளது
திட்டத்தின் தொழில்நுட்ப விபரங்கள்
அணை | |
அமைவிடம் | 197,878E, 129,676N |
அதிகபட்ச உயரம் | 24 m |
அணைக் கட்டின் நீளம் | 200 m |
அணைக் கட்டின் அகலம் | 6 m |
வகை | மண் அணை |
நீர்த்தேக்கம் | |
கொள்ளளவு | 2.25 MCM |
நீர்ப்பிடிப்பு பகுதி | 7.3 km2 |
உயர் வெள்ள நிலையில் நீரில் மூழ்கிய பகுதி | 20.58 ha |
முழு வழங்கல் நிலை | 177 m MSL |
அணையின் மேல்மட்டம் | 178.70 m MSL |
உயர் வெள்ள நிலை | 177.76 m MSL |
குறைந்தபட்ச இயக்க நிலை | 159.5 m MSL |
கீழ்வெளியேற்றியின் மட்டம் | 157.5 m MSL |
தொடர்புகளுக்கு
எல்லேவெவ நீர்த்தேக்கத் திட்டம்
பிராந்திய வரைபடம்
பட தொகுப்பு