தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கம்பஹா, அத்தனகல்ல, மினுவாங்கொடை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் வழங்கப்படும் நீரை சேமிப்பதற்கான நீர்த்தேக்கத்தின் அணைகட்டை நிர்மாணிக்கும் பொறுப்பு நீர்ப்பாசன திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட முன்மொழிவின்பிரகாரம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சும்மார் 250,000 மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படவள்ளது.

திட்டப் பகுதியாது இரண்டு நிர்வாக மாவட்டங்களில் உள்ளடங்கப் படுகின்றது. அவையாவன கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்கள். கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகளும் அடங்கும். அத்தனகலு ஓயாவின் கிளை நதியான பஸ்னகொட ஓயாவின் குறுக்கே "கரஸ்னகல" என்ற கிராமத்தில் இந்த அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒப்பந்தப் பெறுமதி 2.347 பில்லியன் இலங்கை ரூபாவாகும் மற்றும் ஒப்பந்த காலம் 18 மாதங்களாகும். திட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகள் பின்வருமாறு;

பணியமர்த்துபவர் நீர்ப்பாசன அமைச்சு
அமலாக்க முகவர் நீர்ப்பாசனத் திணைக்களம்
நிதியுதவி நிறுவனம் நீர் வழங்கல் அமைச்சகம் / தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
ஒப்பந்ததாரர் சினோஹைட்ரோ கார்ப்பரேஷன் லிமிடெட்

திட்டத்தின் தொழில்நுட்ப விபரங்கள்

அணை  
அமைவிடம் LB 134153 E      212274 N
அதிகபட்ச உயரம் 20.3 m
அணைக் கட்டின் நீளம் 136.5 m
அணைக் கட்டின் அகலம் 5 m
வகை C20 Fine Aggregate Concrete Masonry Gravity Dam
நீர்த்தேக்கம்  
கொள்ளளவு 5.51 MCM
நீர்ப்பிடிப்பு பகுதி 37.6 km2
முழு வழங்கல் நிலையில் நீரில் மூழ்கிய பகுதி 65 Ha
உயர் வெள்ள நிலையில் நீரில் மூழ்கிய பகுதி 76 Ha
முழு வழங்கல் நிலை 45.73 MSL
அணையின் மேல்மட்டம் 48.74 MSL
உயர் வெள்ள நிலை 46.90 MSL
குறைந்தபட்ச இயக்க நிலை 34.00 MSL
நீர்த்தேக்க படுக்கை நிலை 28.18 MSL
வான்  
கதவுகளின் அளவு 3.29 m x 6.0 m
வாயில்களின் எண்ணிக்கை 3
அணையின் வகை WES Weir

தொடர்புகளுக்கு

(பொறி.) ஆர்.டி.ஏ. தேஷப்பிரிய
திட்ட பணிப்பாளர்
+94 332 280 960 / +94 332 280 968
+94 773 621 374 / +94 718 277 635
+94 332 280 968
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிராந்திய வரைபடம்

basangoda map

பட தொகுப்பு