குடாவிலச்சியா என்பது வில்பத்து தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள ஒரு பழங்கால கைவிடப்பட்ட குளமாகும். அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகா விலாச்சிய பிரதேச செயலகப் பிரிவுக்குள் இந்த குளம் அமைந்துள்ளது.

தற்போது, சுமார் 2.55 km நீளமுள்ள பெரிய மண் அணை இடிபாடுகள் காணப்படுகின்றன. அணையின் அதிகபட்ச உயரம் சுமார் 12.6 m மற்றும் ஏழு இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது. முக்கிய உடைப்பு வெலி எலவில் உள்ளது, இது குளத்தின் முக்கிய ஊட்டற் அ௫வியாகும். இந்த மண் கட்டுக சமீபத்தில் புதையல் வேட்டைக்காரர்களால் சேதமாக்கப்பட்ட பாறை அடுக்குகளால் கட்டப்பட்ட இரண்டு து௫சுகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. வான்பகுதி நன்கு வெட்டப்பட்ட பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. அணையின் மேல் முகத்தில் பண்டைய அலைத்தடுப்பு பாதுகாப்பு காணப்படுகிறது. இந்த அலைத்தடுப்பு` பாறையில் வெட்டப்பட்ட செவ்வக வடிவில் அணையின் குறுக்கே கிடைமட்ட அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மண் அணையின் மேல்நிலை முகத்தில் இரண்டு கிடைமட்ட அடுக்குகளால் செய்யப்பட்ட அலைத்தடுப்பு பாதுகாப்பு காணப்படுகின்றது.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சிறந்த குளங்களை கட்டிய மன்னர் வசபா என்பவரால் இந்த குளஙம் கட்டப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளால் கூறப்படும் மற்றொரு புராணக்கதை என்னவென்றால், இந்த குளம் துட்டுகமுனு மன்னரின் மகனான பிரபல இளவரசர் சாலியாவின் ராணி இளவரசி அசோகமாலாவின் வேலையாக இருந்து இ௫க்கலாம். ஆனால் இந்த புராணக்கதைகள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை.

கைவிடப்பட்ட இந்த வரலாற்று நீர்த்தேக்கமானது இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வரலாற்றுப் பெறுமதியை கொண்டி௫க்கும்வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பில் பின்வரும் கூறுகள் குறிப்பிடத்தக்கவை.

அணைக்கட்டு

விரிவான தொல்லியல் தாக்க மதிப்பீட்டின் (AIA) பரிந்துரைகளுடன் மண் அணை மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது. அணையின் அதிகபட்ச உயரம் 12.6 m இருக்கும். மண் அணையின் மேல்நிலை சரிவு 3 க்கு 1 ஆகவும், கீழ்நிலை சரிவு 2.5 க்கு 1 ஆகவும் இருக்கும். அணையானது மேல் முகத்தில் ஒரு அலைத்தடுப்பு மூலம் பாதுகாக்கப்படும். கீழ்நிலை புற்கள் மூலம் பாதுகாக்கப்படும். பழங்கால கட்டும் அதன் முக்கிய அம்சங்களான வெட்டப்பட்ட கிரானைட் அடுக்குகள், மதகு கட்டமைப்புகள் மற்றும் வான் கட்டமைப்புகள் போன்ற முக்கிய அடுசங்களுடன் பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊட்டற் கால்வாய்

மஹா விலாச்சிய குளத்தின் கீழ் உள்ள 320 ha விவசாய நிலங்௧ளுக்கு குடா விலச்சிய குளத்திலிருந்து நீர் வழங்குவதற்காக மஹா வில்லச்சிய இடதுகரை கால்வாயில் அமைந்துள்ள சதா சரண வெவ நீர்பாம் மேம்பாலம் வரை 3.50 கி.மீ நீளமுள்ள ஊட்டற் கால்வாய் அமைக்கப்படும். இந்த கால்வாயின் தொடக்கத்தில் 400 மீட்டர் ஆழமாக வெட்டப்பட வேண்டிய ஒரு பகுதி உள்ளது, மேலும் இந்த பகுதி கால்வாயில் வன விலங்குகள் விழுவதைத் தவிர்க்க மூடி கால்வாய் பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட நீர்த்தேக்க இடத்தின் மொத்த நீரேந்தும் பகுதி சுமார் 184 km2 என மதிப்பிடப்பட்டது.

நீர்த்தேக்கம்

அமைவிடம்

360734E, 131689N

முழு வழங்கல் நிலை (FSL)

54.05m MSL

உயர் வெள்ள நிலை (HFL)

54.66 m MSL

அணையின் மேல்மட்டம் (BTL)

 

து௫சின் கீழ் மட்டம்

50.90 m MSL

மொத்த கொள்ளளவு

 

குறைந்தபட்ச இயக்க நிலை கொள்ளளவு

 

திட்ட செலவு

ரூ. 6000 மில்லியன்

அணை

நீளம்

2.6 Km

மேல் அகலம் (குறைந்தபட்சம்)

5 m

அதிகபட்ச உயரம்

12.6 m

மேல் நிலை சாய்வு

1 on 3

கீழ்நிலை சரிவு

1 on 2.5

அலைத்தடுப்பு பாதுகாப்பின் தடிப்பு

600 mm

சராசரி பாறை அளவு

220 – 450

வான்

வகை

ஆரைச்சிறைக் கதவுகள்

கதவுகளின் எண்ணிக்கை

05

கதவுகளின் அளவு

6.0 m x 3.05 m

வான்மட்டம் (Ogee)

51.00m MSL

குறைந்தபட்ச வெளியேற்றம்

491.75 m3/sec

து௫சு

வகை

கான்கிரீட் கோபுர வகை

து௫சு கதவுவின் கீழ்மட்டம்

50.90m MSL

வாயில்களின் அளவு

1.05 m x 1.45 m

நீர் வெளியேற்றம் அளவு

1.2 m3/sec

பலன்கள்

  • மகாவிளச்சி பிரதேச பிரதேசத்தில் 25,000 பேருக்கு குடிநீர் விநியோகம்.
  • மஹாவிலச்சிய பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் பயிர்ச் சுட்டியை 1.57ல் இருந்து 2.0 ஆக உயர்த்துதல்.
  • வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளுக்கு நீர் வழங்குதல்.
  • தேசிய பூங்கா வழியாக பாயும் மதரகம் ஆறுடன் சுற்றுச்சூழல் ஓட்டத்தை உறுதி செய்தல். இது மறைமுகமாக நிலத்தடி நீரரைச்சேகரிக்௧ச் செய்ய உதவும்.
  • மக்களின் சுகாதார நிலை மேம்படும்.
  • மனித யானை மோதல்களைக் குறைத்தல்.
  • சுற்றுலாத் திறனை அதிகரித்தல்.

தொடர்புகளுக்கு

(பொறி.) கே.பி.யு.கே. திலகரத்ன
பிரதம குடியுரிமை பொறியாளர்
+94 716 890 308

பிராந்திய வரைபடம்

Kudawilachchiya map