தூரநோக்கு

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் சுற்றாடல் மற்றும் உலக மக்களின் பாவனைக்கின்றி கடலில் சேருவதற்கு அனுமதிக்கக்கூடாது” என்ற மகா பராக்கிரமபாகு அரசனின் கூற்றுக்கிணங்க சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்து உறுதியான பொருளாதாரம், மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றை உறுதிபடுத்தவும் நாட்டின் நீர் வளங்களினால் பெற்றுக்கொள்ளக்கூடிய பயனை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுவருவதாகும்.

செயற் பணி

விவசாயத்திற்கு நேரடியாகவும், சுற்றாடல் வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் மின்னுற்பத்தித் தேவைகளுக்கு மறைமுகமாகவும் நீரை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து நாட்டின் நீர் வளத்தை பாவனைக்காக சேகரித்தல், அபிவிருத்தி செய்தல், பாதுகாத்தல் நீர் வளத்தை பகிர்ந்தளித்தல் மற்றும் முகாமைத்துவத்தினூடாக இவ்வளத்தினால் நாட்டிற்கு அதிகூடிய பயனை பெற்றுக்கொள்ளலாகும்.

குறிக்கோள்கள்

நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான குறிக்கோள்கள் வருமாறு;

  • சூழலியல் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துகின்ற அதே வேளையில், நீர்ப்பாசன விவசாயம், நீர் மின்சக்தி, வெள்ள கட்டுப்பாடு, குடிநீர், கைத்தொழில் பயன்பாடு மற்றும் விவசாய அபிவிருத்தி என்பவற்றிற்காக நீர் வளங்களையும் காணியையும் அபிவிருத்தி செய்தல்.
  • நீர்ப்பாசன மற்றும் வடிகால் கருத்திட்டங்களில் பயிர்ச் செய்யக்கூடிய காணிகளுக்காக உவர் தடுப்பு அணை மற்றும் நீர்ப்பாசன வடிகால், ஏற்று நீர்ப்பாசனம் என்பவற்றிற்கான ஏற்பாடுகள்.
  • குடி நீருக்காக நீரை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காணிகளுக்கு வெள்ள பாதுகாப்பு மற்றும் வடிகாலமைப்பு வசதிகளை மேற்கொள்ளுதல்.
  • விவசாய வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும் கிராமிய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலமும் கிராமிய விவசாய சமூகத்தின் வறுமையை ஒழித்தல்.
  • நிலைபேறான விவசாயத்திற்கும் ஏனைய பயன்பாடுகளுக்கும் நீரை சிக்கனமான முறையில் முகாமைப்படுத்துதல்.
  • பாரிய / நடுத்தர / மாகாணங்களுக்கு - இடையிலான சிறிய நீர்ப்பாசன திட்டங்களில் காணி மற்றும் நீர் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • பாரிய / நடுத்தர / மாகாணங்களுக்கு இடையிலான சிறிய நீர்ப்பாசன திட்டங்களிலும் நுண் நீர்ப்பாசன முறைமைகளிலும் பங்கேற்பு முகாமைத்துவத்தையும் நீர் வளங்கள் முகாமைத்துவத்தையும் ஒருங்கிணைத்தல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்துக்கு உரிய ஆற்றுப் பள்ளத்தாக்கின் பங்கேற்பு முகாமைத்துவத்தையும் நீர் வளங்கள் முகாமைத்துவத்தையும் ஒருங்கிணைத்தல்.

செயற்பாடுகள்

  • சூழலியல் காரணிகளுக்கு முன்னுரிமையளித்து சிறந்தமுறையில் பயன்படுத்துவதற்காக ஆற்றுப் பள்ளத்தாக்குகளை அபிவிருத்தி செய்வதற்கு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டத்தைத் தயாரித்தல்.
  • நாட்டின் வெள்ள முகாமைத்துவம் மற்றும் நீர் வளங்கள் என்பவற்றிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரவு தளத்தை முகாமைப்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் சேகரித்தல்.
  • நீர்ப்பாசனம், நீர்-மின்சாரம், வெள்ள கட்டுப்பாடு மற்றும் இயல்புநிலைக்கு மீட்கும் கருத்திட்டங்கள் என்பவற்றின் கருத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் விரிவாக வடிவமைத்தல்.
  • உணவுப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய மற்றும் ஏற்கனவே பயிர்ச் செய்யப்பட்ட காணிகளில் விவசாயிகள் பயிர்ச்செய்வதற்காக ஏந்து நீர்ப்பாசனத்தற்கும் புவியீர்ப்பு நீரை விநியோகிப்பதற்கும் நீரைப் பாதுகாப்பதற்கும் திசை திருப்புவதற்கும் நீர்ப்பாசன மற்றும் குடியேற்ற கருத்திட்டங்களை நிர்மாணித்தல்.
  • ஆபத்து குறையும் வகையில் மழை நீரில் உணவுப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளைப் பாதுகாப்பதற்காக உவர் நீர் தடுப்பு அணைக்கட்டு கருத்திட்டங்களையும் வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பையும் வடிகாலமைப்பையும் நிர்மாணித்தல்.
  • வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சேதங்களைத் தணிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வெள்ள பாதுகாப்பு வசதிகளையும் வடிகாலமைப்பையும் ஏற்படுத்துதல்.
  • நடுத்தர மற்றும் பாரிய நீர்ப்பாசன திட்டங்களின் செயற்பாடு, பராமரிப்பு, மேம்பாடு, புனர்வாழ்வு மற்றும் நீர் முகாமைத்துவம், பயனாளிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்தி சிறந்த உற்பத்தி திறனுக்காக உவர் நீர் தடுப்பு அணைக்கட்டு மற்றும் வடிகாலமைப்பு வெள்ள பாதுகாப்பு திட்டங்கள் உள்ளக துறைசார் பயன்பாட்டுக்கு, குடிநீர் பயன்பாட்டுக்கு, கைத்தொழில் பயன்பாட்டுக்கு மற்றும் சூழலியல் தேவைகளுக்கு நீர் வழங்கல்.
  • அணைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பை தரமுயர்த்துதலும் பராமரித்தலும்.
  • நீர்மயியல், நீரியல், மண் சார் எந்திரவியல், புவியியல், புவியியல் தகவல் முறைமை (GIS) மூலப்பொருள் இயந்திரவியல் மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்திக்குப் பயன்படுத்துகின்ற நில பயன்பாடு பற்றிய ஆராய்ச்சிகள்.
  • நீர்ப்பாசன துறையில் மனித வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக மனித வளங்களை அபிவிருத்தி செய்தல்.
  • இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் கணக்காய்வு முறைமைகள், கணக்கீடு, நிதி முகாமைத்துவ முறைமைகள் என்பவற்றை செயற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
  • நீர் வளங்கள் அபிவிருத்தி, அத்திவார பொறியியல், மண் வேலைகள் மற்றும் சிமெந்து வேலைகள் என்பவற்றின் தர கட்டுப்பாடு, நீர்மயியல் மாதிரிகளைப் பரிசோதித்தல் மற்றும் காணி பயன்பாட்டை திட்டமிடுதல் ஆகிய துறைகளில் அரசாங்க திணைக்களம், நியதிச்சட்ட சபைகள் / கூட்டுத்தாபனங்கள், அரச மற்றும் தனியார் நிறுவகங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
  • நெடுஞ்சாலைகள், சிறிய நீர் மின்சாரம், கைத்தொழில் மற்றும் காணி மீட்டல், குடிநீர் கருத்திட்டங்கள் போன்ற ஏனைய அரசாங்க நிறுவகங்களாலும் தனியார் துறையினாலும் கையாளப்படுகின்ற கருத்திட்டங்களுக்குத் தேவைப்படும்போது நீர்ப்பாசன திணைக்கள அனுமதி வழங்குதல்.