திணைக்களத்தை மீள்கட்டமைப்பதன் ஒரு பகுதியாக  2012 ஆம் ஆண்டில் விசேட பிரிவொன்றாக  ஆய்வு உதவி மற்றும் செயன்முறை  மேம்பாட்டு பிரிவு நிறுவப்பட்டது. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதற்கான பிரதான குறிக்கோள் யாதெனில் ஆய்வு சார்ந்த அணுகுமுறைகளினூடாக திணைக்களத்தின்   செயன்முறைகளை முன்னேற்றுவதற்கு  தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதேயாகும். இப்பிரிவானது பொறியியல், விஞ்ஞானம், நிர்வாகம், சமூக விஞ்ஞானம், கணக்கியல் ஆகிய துறைகளிலும் மற்றும் திணைக்களத்தின்   செயன்முறைகளை முன்னேற்றுவதிலும் நீர்ப்பாசனத்துறையில் தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும்  ஏனைய விசேட கற்கை நெறிகளிலும் ஆய்வுகளை நடாத்துவதற்கு  ஆர்வமுள்ள எந்தவொரு உத்தியோகத்தருக்கும் வழிகாட்ட உதவுகின்றது.

காலநிலை மாற்றம், இலங்கையின் புராதன நீர்ப்பாசன தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு அவற்றை தற்போதய சூழலுக்கேற்ப மாற்றியமைத்தல், நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை நவீனமயப்படுதல் மற்றும் நீர்ப்பாசன முகாமைத்துவம் என்பவற்றில்  ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம்  கசிவுப்பாதை வெளியேற்ற திறன் விரிவாக்கல் தொழில்நுட்ப கற்கைகளை  மேம்படுத்தி அணைக்கட்டுகளைப் பாதுகாப்பதனூடாக திணைக்களத்தின் குறிக்கோளை மேம்படுத்தி  திணைக்களத்தின் தொழிற்பாடுகளை நிறைவேற்ற துணைபுரிகின்றது.

இப்பிரிவானது மேலதிக பணிப்பாளர் நாயகம்(முறைமை முகாமைத்துவம்) அவர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செயற்பாடுகள்

  • திணைக்களத்தின் செயன்முறை மேம்பாட்டு தேவைப்பாடுகள் மற்றும் ஆய்வு தேவைப்பாடுகளை இனங்காணல்.
  • திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு ஆய்வுகளை நடாத்துவதற்கு தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளல்.
  • பல்கலைக்கழகங்களுடனும் ஏனைய ஆய்வு நிறுவனங்களுடனும் இணைந்து ஆய்வுகளுக்கான வாய்ப்புகளை வழங்குதல்.
  • தேவையேற்படும் போது பல்கலைக்கழகங்கள், ஏனைய ஆய்வு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சம்பத்தப்பட்ட முகவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடாத்துதல்.
  • செயற்திறன் பின்னடைவுகள் மற்றும் செயற்திறன் மேம்பாட்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள தந்​ரோபாயங்களுக்கான ​ பிரச்சினைக்குரிய பகுதிகளை இனங்கண்டு அவற்றிற்கான உதவிகளை வழங்குதல்.
  • நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் துறைகளில் செயன்முறைகளை மேம்படுத்தும் அறிவுசார் செயற்பாடுகளை பரப்புதல்.
  • ஊழியர்களுக்கான தரவுத்தளம் மற்றும் ஓய்வூதியத் தயார்படுத்தலில் முன்னேற்றத்தை கண்காணிக்கும் தரவுத்தளம் என்பவற்றை பராமரித்தல்.

 சேவைகள்

  • செயன்முறை மேம்பாட்டு தேவைப்பாடுகளுக்கான அறிவுப்பரம்பலை உருவாக்குதல்.
  • தேவையேற்படுமிடத்து ஊழியர் முகாமைத்துவ தகவல்களை தேவையானவர்களுக்கு வழங்குதல்.
  • ஓய்வூதியத் தயார்படுத்தலில் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வசதிகளை ஏற்படுத்தி தாமதத்தை தவிர்த்தல்.
  • ஆய்வுகளை நடாத்துவதற்கு ஆர்வமுள்ள திணைக்கள ஊழியர்களுக்கு அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு பல்கலைக்கழகங்களுடனும் ஏனைய ஆய்வு நிறுவனங்களுடனும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குதல்.

Head of Section

Eng Inoka Madam
எந்திரி. திருமதி இனோகா விக்கிரமசிங்க
நீர்ப்பாசன பணிப்பாளர்(ஆய்வு உதவி மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்தும் அலகு)
Office:  +94-11-2584956
Mobile: +94-71-8008047
Fax:      +94-11-2584956
e-mail:  trspib@irrigation.gov.lk