குறிக்கோள்கள்

தரமான மற்றும் அளவு ரீதியான விஞ்ஞான தகவல்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன மற்றும் ஏனைய அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக நிலப்பரப்பை பயன்படுத்துவதைப் பரிந்துரை செய்தல்.

செயற்பாடுகள்

  • பொது நோக்கு மற்றும் சிறப்பு மண் நில அளவையை நடத்துதல்.
  • கொடுக்கப்பட்ட ஒரு காணிக்கு சாத்தியமான அனைத்து நில பயன்பாட்டு விருப்பத் தெரிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் அந்தப் பிரதேசத்திற்கு நில பயன்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
  • மண் வரைபடங்கள், நில பயன்பாட்டு வரைபடங்கள் மற்றும் தேசிய மட்ட, மாகாண மட்ட, மாவட்ட மட்ட கருத்திட்ட மற்றும் விவசாய மட்ட சாத்தியமான நில பயன்பாட்டு வரைபடங்களை முன்வைத்தல்.
  • நீர்ப்பாசன கருத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் வடிவமைப்பதற்கும் மண் தரவுகளை வழங்குதல்.
  • நீர்ப்பாசன கருத்திட்டங்களுக்காக பயிர்ளையும் ஏனைய காணி பயன்பாட்டு வகைகளையும் பரிந்துரை செய்தல்.
  • நீர்ப்பாசன கருத்திட்டங்கள் மற்றும் ஏனைய நீர் வளங்களின் நீர் தர தரவுகளை வழங்குதல்.
  • மண் அரிப்பு, சாத்தியமான அமிலத்தன்மை, காரத் தன்மமை மற்றும் உவர் தன்மை போன்ற சாத்தியமான இடையூறுகளின் அளவு மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  • மண் மற்றும் நீருக்கான இரசாயன மற்றும் பௌதிக பகுப்பாய்வை நடத்துதல்.
  • மண் பண்புகள் மற்றும் நீர் தரம் பற்றிய ஆராய்ச்சியை நடத்துதல்.

பிரிவுத் தலைவர்

செல்வி. ஜி.பி.ஆர். சில்வா
பணிப்பாளர் (நில பயன்பாடு)
+94 112 583 474
+94 716 832 278
+94 112 583 474