அனுராதபுரம், பொலனறுவை, மற்றும் வவுனியா – மன்னார் நீர்ப்பாசன பிராந்தியங்களை உள்ளடக்கி பிராந்திய திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு வேலைகளை காப்பீடு செய்வதற்கு வடக்கு மற்றும் வட மத்திய வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்கள்

பாரிய கருத்திட்ட வகைக்குள் சேராத மேற்குறிப்பிட்ட மூன்று நீர்ப்பாசன பிராந்தியங்களின் திட்டமிடல் மற்றும் வடிவமைக்கும் பணிகளை நிறைவேற்றுவதை நீர்ப்பாசன - திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் - ஊவா வலயம் - பணிப்பாளர் பொறுப்பு வகிக்கிறார்.

செயற்பாடுகள்

  • நீர்ப்பாசன பணிப்பாளர் (பிராந்தியம்) அல்லது பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களால் பிராந்திய மட்டத்தில் முன்மொழியப்பட்ட புதிய, மீளமைக்கும் அல்லது புனரமைக்கும் நீர் வளங்கள் அபிவிருத்தி கருத்திட்டத்தை ஊக்குவித்தல்.
  • பூரண ஆய்வு அளவைகளை முன்னெடுத்தல், பொறியியல் மூலப்பொருட்கள் அளவைகளை முன்னெடுத்தல் மற்றும் திடமான முன்மொழிவுகள், வடிவமைத்தல் மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய வலயத்திற்குள் நீர்ப்பாசன திட்டங்களின் நிர்மாண வரைபடங்கள் என்பவற்றின் ஆரம்ப ஆய்வு அறிக்கை தயாரித்தல்.
  • நீரோந்தும் மற்றும் நீர்த்தேக்க நடத்தைகளை ஆராய்தல், வெள்ளம் மற்றும் வரட்சி அனர்த்த என்பவற்றிற்காக வினைத்திறன் மிக்க முகாமைத்துவ முறைமைக்காக காலநிலை எதிர்வுகூறல் அலகை விருத்தி செய்தல்.
  • வடக்கு மற்றும் வடமத்திய வலயத்தில் திட்டங்களுக்காக பூர்வாங்க சாத்தியக்கூற்று ஆய்வுகளைத் தயாரித்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
  • செயற்பாட்டு கற்கைகள், வெள்ளப்பெருக்கு கற்கைகள், திடமான முன்மொழிவுகளை சட்டகத்துக்குள் கொண்டுவருதல், வடிவமைத்தல் மற்றும் வடக்கு மற்றும் வடமத்திய வலயத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிர்மாண வரைபடங்களைத் தயாரித்தல்.
  • சூழலியல் கற்கை கிளைக்கு உதவி சேவைகளை வழங்குதல் மற்றும் இயற்கை நேசம் கொண்ட வகையில் நீர்ப்பாசன திட்டங்களைப் பராமரிப்பதற்கு மாவட்டத்திற்கு உதவுதல்.

பிரிவுத் தலைவர்

பொறி. டி. திருவருட்செல்வன்
நீர்ப்பாசன பணிப்பாளர்
வலய திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு பணிப்பாளர் அலுவலகம்,
நீர்ப்பாசனத் திணைக்களம்,
அனுராதபுரம்.
+94 252 237 351
+94 776 259 316
+94 272 237 351
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.