குறிக்கோள்கள்

  • சரியான வடிகாலைப் பராமரிப்பதன் மூலம் தாழ் நிலப் பிரதேசங்களில் உவர் நீர் அகற்றுதல், வெள்ளப் பெருக்கு முறைமை, வடிகால் என்பவற்றில் நெற் பயிர்ச் செய்கைக்கு வசதிப்படுத்துதல். அவர்களை வெள்ளப் பெருக்கிலிருந்து அல்லது அத்தகைய பிரதேசங்களை உவர் நீர் இடையூறிலிருந்து பாதுகாப்பதன் மூலம் நெற் பயிர்ச் செய்கைக்கு வசதிப்படுத்துதல்.
  • வெள்ள அனர்த்தத்திலிருந்து சுற்றாடல், அரச மற்றும் தனியார் சொத்துக்கள், மனித உயிர்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அந்தப் பிரதேசங்களில் வெள்ளத்திற்கு கட்டமைப்பு ரீதியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

செயற்பாடுகள்

  • நாட்டில் வடிகால் மற்றும் வெள்ள முறைமைகளை செயற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
  • வடிகால் மற்றும் வெள்ள முறைமைகளைப் புனரமைத்தல்.
  • உவர் நீர் தடுப்பு முறைமைகளை செயற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
  • தேவைகளை அடையாளம் கண்டு புதிய வடிகால் மற்றும் உவர் நீர் அகற்றும் முறைமைகளைத் திட்டமிடுதல்.
  • புதிய வடிகால், வெள்ளப் பெருக்கு மற்றும் உவர் நீர் தடுப்பு முறைமைகளுக்காக கருத்ததிட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்.
  • வடிகால், வெள்ளப் பாதுகாப்பு மற்றும் உவர் நீர் தடுப்பு விடயப்பரப்பின் கீழ் பாரிய மற்றும் நடுத்தர கருத்திட்டங்களை அமுலாக்குதல்.
  • தொழில்நுட்ப ஆலோசனைகளுக்காக தேசிய மட்ட தொழில்நுட்ப குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் வடிகால் மற்றும் வெள்ளப் பிரச்சினை தொடர்பாக தேசிய மட்ட கருத்திட்டங்களுக்குப் பரிந்துரை செய்தல்.
  • வடிகால் மற்றும் வெள்ள அனர்த்தம் இருக்கின்ற அரச மற்றும் தனியார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைகளை வழங்குதல்.

பிரிவுத் தலைவர்

பொறி. பீ.ஏ.எம்.எஸ். பெலிகஸ்வத்த
நீர்ப்பாசன பணிப்பாளர் (வடிகால் மற்றும் வெள்ள முறைமைகள்)
+94 112 555 398
+94 718 471 846
+94 112 555 398