குறிக்கோள்கள்

நிலைபேறான அபிவிருத்திக்கு பிரதான வரவுசெலவுதிட்ட நடவடிக்கைமுறையை திட்டமிடல் மற்றும் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு திட்டத்திற்கு அமைவாக நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குவதை உறுதிப்படுத்துவதற்கு உதவுதல்.

கிளையின் செயற்பாடுகள்

  • தேசிய வரவுசெலவுதிட்ட திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக தொடர்ந்து வரும் வருடங்களுக்காக திணைக்களத்தின் நீண்டகால நிதி மற்றும் பௌதிக நிகழ்ச்சித்திட்டங்களையும் பிரதான வரவுசெலவுதிட்டத்தையும் தயாரித்தல்.
  • ஒவ்வொரு நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த வருடத்தில் அமுலாக்க நிகழ்ச்சித்திட்டத்தை (செயற்பாட்டுத் திட்டத்தை) தயாரித்தல்.
  • வருடத்தின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட பிரதான நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக அந்த வருடத்தில் செயற்படுத்துகின்ற மாதாந்த நிகழ்ச்சித்திட்டங்களை கண்காணித்தல்.
  • நீர்ப்பாசன அமைச்சு மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு திணைக்களத்திற்கு தேவைப்படும் வடிவத்தில் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
  • நிருவாக அறிக்கைகள், செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் வருடாந்த திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்தல்.
  • தேசிய திட்டமிடல் திணைக்களத்திலிருந்து புதிய கருத்திட்ட முன்மொழிவுகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுதல்.
  • தேவைப்படும்போது புதிய கருத்திட்டங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரித்தல்.
  • பாராளுமன்றத்தின் 'அரசாங்க கணக்குகள் குழுவுக்கு' தகவல்களைத் தயாரித்து வழங்குதல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்தின் மற்றும் ஏனைய அமைப்புகளின் (மத்திய வங்கி மற்றும் தொகைக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் போன்றவை..) செயலாற்றுகை தரவுகளை சமர்ப்பித்தல்.