மல்வத்து ஓயா (கீழ் பகுதியில் அருவி ஆறு என அழைக்கப்படுகிறது) மொத்த நீளம் 162 km மற்றும் இலங்கையின் இரண்டாவது நீளமான ஆற்றுப் படுகை ஆகும். இது வடமத்திய மாகாணத்தில் ரித்திகல மற்றும் இனாமலுவ மலைகளில் (முறையே 766m MSL மற்றும் 383m MSL) இருந்து உருவாகி மன்னார் மாவட்டத்தில் அரிப்பு என்ற இடத்தில் கடலில் கலக்கின்றது. மல்வத்து ஓயாவின் மேல் நீரேந்தும் பகுதி 70% அனுராதபுரம் மாவட்டத்திலும், கீழ் நீரேந்தும் பகுதி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.

மல்வத்து ஓயா படுகையின் கீழ் பகுதியில் இரண்டு பழங்கால நீர்த்தேக்கங்கள் உள்ளன, அதாவது கட்டுக்கரை குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளம் முறையே 9,895 ஹெக்டேர் மற்றும் 2521 ஹெக்டேர் நீர்ப்பாசனப் பகுதிகளைக் கொண்டுள்ளது மற்றும் முறையே 1.08 மற்றும் 1.0 பயிர் தீவிரத்துடன் செயல்படுகிறது. இந்த இரண்டு குளங்களும் மல்வத்து ஓயாவின் குறுக்கே கடல் முகப்பில் இருந்து 36 km மேல்புறத்தில் கட்டப்பட்ட புராதன தோக்கம் அணைக்கட்டின் மூலம் நீர் திசை தி௫ப்பகின்றது. ஒரு பருவத்தில் முழு அளவில் பாசன நீரை வழங்க இரண்டு குளங்களின் சேமிப்புத் திறன் போதுமானதாக இல்லாததால், குறிப்பாக சிறுபோகத்தின் பிற்பகுதியில் தேக்கம் அணைக்கட்டில் இருந்து தொடர்ந்து நீரைசெத்தவேன்டிள்ளது.

மல்வத்து ஓயாவில் போதிய நீர்வரத்து இல்லாததால் இரண்டு குளங்களின் கீழும் சிறுபோ பருவத்தில் பயிர்ச்செய்கை செய்ய முடியாது. மழைக் காலங்களில் தோக்கம் அணைக்கட்டுக்கு மேலாக அதிக அளவு நீர் பாய்வதால் மல்வத்து ஓயாவின் தாழ்வான பகுதிகளில் குறிப்பாக முசலி, நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கட்டுக்கரை குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளத்தின் பாசனப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வறட்சிக் காலத்தில் வறட்சியாலும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்காலும் அவதிப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் தேக்கம் அணைக்கட்டில் நிரம்பி வழியும் நீரை தக்கவைத்து, வறண்ட காலங்களில் வெளியேற்றினால், இரண்டு குளங்களின் விவசாய உற்பத்தித்திறனை பெருமளவில் மேம்படுத்த முடியும். மேலும், இது மன்னார் மாவட்டத்தில் வெள்ள அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் உச்ச நீரோட்டத்தைத் தக்கவைக்க மல்வத்து ஓயாவின் (போகொட கிராமத்தில்) கீழ் மல்வத்து ஓயா என குறிப்பிடப்படும் நீர்த்தேக்கமொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப விபரங்கள்

விளக்கம் தரவு
மொத்த சேமிப்பு 209 MCM
முழு வழங்கல் நிலையில் நீரில் மூழ்கிய பகுதி 4422 Ha
முழு வழங்கல் நிலை 54.11 m msl
உயர் வெள்ள நிலை 55.05 m msl
அணையின் மேல்மட்டம் 58.52 m msl
அணையின் மேல் அகலம் 6 m
அணையின் நீளம் 3.59 km
அலைமட்ட உயரம் 1.24m (4.1 அடி)
அலைமட்ட உயரம் இல்லாத இலவச பலகை 3.18 m (10.4 அடி)
அணையின் அதிகபட்ச உயரம் 22.22 m (72.9 அடி)
அணையின் வகை பூமி நிரப்பு வகை

பயனாளிபுப் பகுதிகள்

  • புதிய பாசன நிலங்களில் 1052 ஹெக்டேர் (நெல், பிறபயிச்செய்கை) மற்றும் 12,420 ஹெக்டேர் தற்போதுள்ள சாகுபடி நிலங்களில் கட்டுக்கரை குளத்தின் மற்றும் அகத்திமுருப்பு குளத்தின் கீழ் நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல்.
  • வவுனியா, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் வருடாந்த குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 12 MCM நீரை வழங்குதல்.
  • இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 4.68 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  • பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம்.
  • சுற்றுலாத் துறையின் வளர்ச்சி.
  • புதிய நகர திட்டமிடல் திட்டத்தின் கீழ் தந்திரிமலை அபிவிருத்தி.
  • வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெள்ளம் தணிப்பு.
  • சூரிய சக்தி திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  • ஏற்று நீர்ப்பாசன திட்டம்.
  • திட்ட காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள்.
  • மீன்வளம் மற்றும் நீர்வளங்களின் வளர்ச்சி.
  • மீழ் காடு வளர்ப்பு.
  • வன விலங்குகளின் நடமாட்டத்தை மேம்படுத்தும் போது காடுகள் / வனவிலங்கு காப்பகங்களை மேம்படுத்துதல்.
  • உள் வீதி வலையமைப்பை மேம்படுத்துதல்.
  • பலப்படுத்தப்பட்ட விவசாய சேவைகள் நடவடிக்கைகள் மற்றும் நிறுவன வளர்ச்சிகள்.

தொடர்புகளுக்கு

எம்.ஏ.எஸ்.எஸ் குணசேன
திட்ட பணிப்பாளர்
-
+94 252 227 887
+94 714 413 760
+94 252 227 887
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.