பயிற்சிப் பிரிவு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பயிற்சிப்பிரிவானது திணைக்கள ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் விருத்தி தேவைப்பாடுகளை  இனங்காண்பதற்காக நிறுவப்பட்டது. மேலும்​ ஆட்சேர்ப்பு திட்டங்களில் (SoR) விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக அனைத்து ஊழியர்களுக்கும் பரீட்சைகளை ​நடாத்துவதற்கும் தலைமைக் காரியாலயம், பிராந்திய காரியாலயங்கள், நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம், கல்கமுவ ஆகிய இடங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்பு செய்யவும் உதவுகின்றது.

சேவைக்கு முந்திய மற்றும் சேவையில் உள்ளவர்களுக்கான பயிற்சிகள், வினைத்திறமை காண் தடைப்பரீட்சைகள், தொழில்நுட்ப பரீட்சைகள்(செய்முறை) என்பன நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றது  மற்றும் ஆரம்பப் பயிற்சி நெறிகள் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் அவர்கள் சார்பாக பயிற்சிப் பிரிவினால் நடாத்தப்படுகின்றது. நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் மற்றும் பயிற்சிப் பிரிவு என்பன நீர்ப்பாசன மேலதிக பணிப்பாளர் நாயகம் (முறைமை முகாமைத்துவம்) அவர்களின் மேற்பார்வையில் பணிப்பாளரின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

பயிற்சிப் பிரிவின் தொழிற்பாடுகள் கீழே காணப்படும் பாய்ச்சற்கோட்டு வரிப்படம் மூலம் காட்டப்பட்டுள்ளது.

 flow chart tamil

மேலும் இப்பிரிவானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிநெறிகளை​ பெற்றுக்கொள்ள ஊழியர்களை நெறிப்படுத்துகின்றது அவையாவன குறுகிய கால பயிற்சிநெறிகள் மற்றும் பட்டப்பின் படிப்பு கற்கைநெறிகள் மற்றும் முதுமானி, முதுதத்துவமானி, முனைவர் பட்டம் உள்ளடங்கலாக பட்டப்பின் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகும்.  உள்நாட்டு பயிற்சிநெறிகளில் ஆரம்பப் பயிற்சி, குறுகிய கால பயிற்சிகள்,  புத்துணர்வுப் பயிற்சிகள்  மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாக்கள்.   இவையனைத்தும் நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம், இலங்கை மன்றம் என்பவற்றால் நடாத்தப்படுகின்றன.

மேலும் இப்பிரிவானது  ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் என்பவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அந்நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க பயிற்சிகளை வழங்குகின்றது.

அதற்கிணங்க பயிற்சிப் பிரிவானது திணைக்கள ஊழியர்கள் மற்றும் வேற்று நிறுவன ஊழியர்களின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ற பல்வேறுபட்ட​ தொழிற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் தேசிய இலக்குகளை அடைவதில் பங்காற்றி நீர்ப்பாசன மற்றும் நீர்வளத் துறையில் ஒரு முன்னணியான அமைப்பாக விளங்குகின்றது.

பிரிவுத் தலைவர்

Eng Inoka Madam
எந்திரி. திருமதி இனோகா விக்கிரமசிங்க
நீர்ப்பாசன பணிப்பாளர்(ஆய்வு உதவி மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்தும் அலகு)
Office:  +94-11-2584956
Mobile: +94-71-8008047
Fax:      +94-11-2584956
e-mail:  trspib@irrigation.gov.lk