அறிமுகம்

நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சிறப்புச்சேவைப் பிரிவுகளில் ஒன்றாகும், இது நாட்டின் நீரியல் மற்றும் வானிலையியல் தொடர்பான தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்கு பொறுப்பான பிரிவாக விளங்குகின்றது. இப்பிரிவு நீர்ப்பாசனத் திணைக்களம் உருவாக்கப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1935 ஆம் ஆண்டில் ஒரு தனிப் பிரிவாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், முக்கிய ஆற்றுப் படுகைகளில் நீரியல் மற்றும் வானிலையியல் தரவு சேகரிப்பு இப்பிரிவு ஆரம்பிப்பதற்கு சில தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. களனி ஆற்றின் ‘நாகலகம் தெரு’ என்ற இடத்தில் உள்ள  ஆற்று மட்டம் அளக்கும் மானி 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த பிரிவு முக்கியமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்ட அளவீடுகளை அளப்பதுடன்  அவ்விடங்களில் மழைவீழ்ச்சியையும் அளவிடுகின்றது. அத்தோடு சில நீரியல் நிலையங்களில் காற்றின்வேகம், ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் நீர் ஆவியாகும் அளவும் அளவிடப்படுகின்றது.  42 நிரந்தர அளவீட்டு நிலையங்கள், 66 புறநிலை நிலையங்கள் மற்றும் 106 தானியங்கி அளவீட்டு நிலையங்கள் இப்பிரிவால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன. மேலும், 56 மழைவீழ்ச்சி மற்றும் ஏனைய வானிலை சம்பந்தமான தரவுகளை சேகரிப்பதற்காக சில தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் நிறுவப்பட்டிருக்கும்  அளவுமானிகளில் இருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தினசரி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.  தற்போது, ​​நீர்ப்பாசன பணிப்பாளர், தலைமைப் பொறியியலாளர், மூன்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், ஒரு புவி வளப் பொறியியலாளர், நீரியல் தரவு கண்காணிப்பாளர் (HDS), நீரியல் கள கண்காணிப்பாளர் (HFS), 10 நீரியல் உதவியாளர்கள் (HA), 28   நீரியல் கள உதவியாளர்கள் (HFA), இரண்டு வரைவாளர்கள் (DM), ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர் (DO), இரண்டு முகாமைத்துவ உதவியாளர்கள் (MA), ஒரு களஞ்சிய உதவியாளர், ஆறு வாகன சாரதிகள் (சாரதிகளாக தற்காலிக நியமனங்களில் சாரதிகளின் கடமைகளை உள்ளடக்கிய நபர்கள் உட்பட), ஒரு KKS மற்றும் 85  நீரியல் அளவை உதவியாளர்கள் (HSH), மேலும், 45 க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் இப் பிரிவிலுள்ள  நீரியல் அளவை உதவியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பணிபுரிந்து வருகின்றனர்.

நோக்கங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தனித்துவமான பங்கை வகிக்கும் இப்பிரிவின் முதன்மை நோக்கங்கள்:

1. நீரியல் மற்றும் வானிலையியல் தரவு சேகரிப்பு மற்றும் முகாமைத்துவம்

2. நீரியல் மற்றும் வானிலையியல் தரவு பகுப்பாய்வு

3. வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை

4. பேரிடர்களை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும் ஏனைய அனர்த்த  முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்.

செயற்பாடுகள்

பிரிவின் முக்கிய செயற்பாடுகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.

  1. நாடு முழுவதும் நீரியல் மற்றும் வானிலையியல் தரவு சேகரித்தல்.
  2. நீரியல் மற்றும் வானிலையியல் தரவு மற்றும் தகவல்களை காப்பகப்படுத்துதல் மற்றும் வழங்குதல்.தொகுக்கப்பட்ட  நீரியல் மற்றும் வானிலையியல் தரவு மற்றும் பிரிவினால் சேகரிக்கப்பட்டு காப்பகப்படுத்தப்பட்ட  தகவல்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தால்  மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக நீர் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிற நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. நீர்ப்பாசன மேம்பாடு, உள்நாட்டு மற்றும் தொழில்துறை நீர் பயன்பாடுகள், வெள்ள முகாமைத்துவம், பல்வேறுபட்ட தொழில் வல்லுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படும் கல்வியியல் ஆராய்ச்சிப் பணிகள் போன்றவற்றிற்கான நீர்வளத் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்திற்கு  இந்தத் தகவல்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  3. நாடு முழுவதும் உள்ள நீரியல் நிலையத்தின் வளர்ச்சிகள் மற்றும் மதிப்பீடு வளைவுகளை மேம்படுத்துதல் (நிரந்தர மற்றும் புற நிலை அளவீட்டு நிலையங்கள் இரண்டும்).
  4. நீரியல் மற்றும் வானிலையியல் தரவுகளை செயலாக்குதல் மற்றும் பயனுள்ள தகவலாக மாற்றுதல்
  5. நீர்ப்பாசன கால்வாய்களுக்கான மதிப்பீட்டு வரைபுகளை உருவாக்குதல்.
  6. வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்புக்கான வெள்ள மாதிரிகளை உருவாக்குதல்.
  7. முக்கிய ஆற்றுப்படுகைகளில் வெள்ள நிகழ்வுகளை வரைபடமாக்குதல்.
  8. நீரியல் ஆண்டறிக்கை வெளியீடு.
  9. நாட்டின் முக்கிய ஆற்றுப்படுகைகளுக்கான வெள்ள கண்காணிப்பு, எதிர்வுகூறல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை வழங்குதல்.

வெள்ள முன் எச்சரிக்கை

நாள் முழுவதும் நாட்டின் அனைத்து முக்கிய ஆற்றுப்படுகைகளில் வெள்ளத்தை கண்காணிப்பதும் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை வழங்குவதும் இப்பிரிவின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வெள்ள நிகழ்விலும் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் பொது மக்கள் உட்பட பல பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இச்செய்திகள் வழங்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் வழங்கப்படுகின்றன என்பதற்கு வரலாற்றுப் பதிவுகள் சான்றாக உள்ளன. இப்பிரிவின் ஊழியர்களால் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை குறைப்பது மட்டுமல்லாமல், பல மனித உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. 2021 இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வழங்கப்பட்ட எச்சரிக்கை செய்திகளின் துல்லியம் மற்றும் விரைவான தன்மையை பின்வரும் வரைபடங்கள்​ காட்டுகின்றன.

 

Kelani Ganga

படம்1 : களனி கங்கை ஆற்றுப்படுக்கைக்கு வழங்கப்பட்ட வெள்ள முன்னெச்சரிக்கை

 

Maha oya

படம்2 : மகாஓயா ஆற்றுப்படுக்கைக்கு வழங்கப்பட்ட வெள்ள முன்னெச்சரிக்கை

 

மதிப்பீட்டு வரைபுகளைத் தயாரித்தல்

நீரோட்ட அளவீடுகளை எடுப்பதில் ஈடுபடுவது இப்பிரிவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். நீர் வெளியேற்ற அளவீடுகள் முக்கிய ஆறுகளில் மட்டுமல்லாது நீரின் கொள்ளளவை அளக்க வேண்டிய கிளை நதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியேற்ற அளவீடுகளை எடுக்கும் செயல்முறை பொதுவாக "Current Metering" என்று அழைக்கப்படுகிறது. மதிப்பீட்டு வரைபுகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் இந்த செயல்முறையின் முக்கிய நோக்கமாகும். துல்லியமான மற்றும் பயன்படுத்தக்கூடிய மதிப்பீட்டு வரைபை உருவாக்க, இந்த அளவீடுகள் வெவ்வேறு நீர் மட்டங்களில் எடுக்கப்பட வேண்டும். மதிப்பீட்டு வரைபுகளை உருவாக்கும் போது குறைந்த, இயல்பான மற்றும் வெள்ளப் நீரோட்டங்களின் போது அளவீடுகளை எடுத்தல் மிகவும் அவசியம். இந்தத் தரவுகள் பல நீர்வள திட்டமிடல் வேலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

Rating Curves

படம்3 : நீரியல் அளவை உதவியாளர்களின் உதவியோடு நீரியல் கள உதவியாளர்கள் நீரோட்ட  அளவீடுகளை அளக்கும் விதம்

 

நீரியல் மற்றும் வானிலையியல் தகவல் வலையமைப்பு (HMIS)

42 நிரந்தர அளவீட்டு நிலையங்கள் தவிர, 106 தானியங்கி நிலையங்கள் நிறுவப்பட்டு, மேற்பார்வையிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தரவு தானாக அனுப்பப்படுகிறது எனினும் பிரிவின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் தரவின் தரத்தை பராமரிக்க மற்றும் உறுதி செய்ய அந்த தானியங்கி நிலையங்களை மேற்பார்வை செய்கின்றளர். நாட்டின் பாரிய நதிகளின் முக்கியமான மற்றும் சிக்கலான இடங்களை உள்ளடக்கும் வகையில் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் தரவு கணினிக்கு அனுப்பப்படுகிறது.  இத் தரவுகள் வெள்ள நிகழ்வுகளின் போது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது மற்றும் முன்னறிவிப்பு நோக்கங்களுக்காக நீரியல் மாதிரிகளை இயக்குவதில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இருப்பினும் இத்தகவல் வலையமைப்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட தரப்பினருக்கு மட்டும் வலையமைப்பின் அணுகல் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்வரும் படம் தரவு ஒருங்கிணைக்கப்பட்டு காட்டப்படும்  பாவனையாளர் Interface ஒன்றினுடையதாகும்.

HMIS 1

அரைத் தானியங்கி தகவல் அமைப்பு

மேலே குறிப்பிட்டுள்ளபடி, 42 நிரந்தர அளவீட்டு நிலையங்கள் உள்ளன, அவற்றின் மூலம் நதி நீர் மட்டங்கள் மற்றும் மழைவீழ்ச்சி இரண்டும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும்  சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையங்கள் 24x7 அடிப்படையில் நீரியல் அளவை உதவியாளர்களின் உதவியுடன் நிர்வகிக்கப்படுகின்றன.  இந்த அனைத்து நிலையங்களுக்கும் நீரியல் கள உதவியாளர்கள் மேற்பார்வை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் அவர்கள் தரவின் தரத்தை பராமரிக்க இந்த நிலையங்களை தொடர்ந்து மேற்பார்வை  செய்கிறார்கள். சமீபத்தில், ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் மழைவீழ்ச்சியை தொலைதூரத்திலிருந்து கண்காணிக்கும் வகையில், அரை தானியங்கி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. நாளின் எந்த நேரத்திலும் Dashboard ஐ அணுக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். Dashboard ஐ அணுக பின்வரும் இணையத்தள முகவரியை பயன்படுத்தலாம். https://www.arcgis.com/apps/dashboards/2cffe83c9ff5497d97375498bdf3ff38. மாற்றாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் இணையதளத்தின் முதன்மைப் பக்கத்தில் உள்ள " பாரிய நதிகளில் நிகழ்நேர நீர் நிலைகள்" குறியீட்டை(Icon) அழுத்துவதன் மூலம் இதை அணுகலாம். Dashboard Interface பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

SAIS

நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, 2021 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில குறிப்பிடத்தக்க பணிகள் பின்வருமாறு.  நாட்டில்  கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைகள் காணப்பட்ட   வேளைகளில் கூட  பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

  1. நீர்ப்பாசனத் துறையின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை மேம்படுத்தும் முயற்சியின் கீழ், 1988 முதல் புதுப்பிக்கப்படாத IDF(Intensity Duration Frequency) வரைபுகளை ஒட்டுமொத்த இலங்கைக்கும் புதுப்பித்தல். இறுதி விளைவாக, புதிய IDF மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டு 11 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
  2. Iso-விளைச்சல் வளைவுகளை முறையே மகா பருவத்திற்கும் (அக்டோபர் முதல் மார்ச் வரை) மற்றும் யால பருவத்திற்கும் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) புதுப்பித்தல்.3.
  3. இலங்கையில் விவசாய சூழலியல் வலயங்களின் 75% நிகழ்தகவு மழைவீழ்ச்சியைக் கணக்கிடுதல். எண்பதுகளின் முற்பகுதியில் தற்போதைய விபரங்கள் கணக்கிடப்பட்டாலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவானது 281 நிலையங்களுக்கும் குறைந்தபட்சம் 25 வருடங்களாகக் காணப்பட்ட மாதாந்தர மழைவீழ்ச்சித் தரவுகளை அவதானித்து 75% நிகழ்தகவு மழைவீழ்ச்சித் தரவுகளை மேம்படுத்தி வழங்குகின்றது.
  4. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியை புதுப்பிப்பதற்காக 15 நிரந்தர அளவீட்டு நிலையங்களுக்கான நீரேந்து பகுதிகளின் அளவுருக்களைக் கணக்கிடுதல் (Cp & Ct).

தொடர்புகளுக்கு

நீரியல் தரவு விசாரணைகளுக்கு                                                    : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிர்வாக மற்றும் விலைமனுக்கோரலுக்கான நோக்கங்களுக்காக: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 Hydrology AnnualFlood maps

பிரிவுத் தலைவர்

Eng SPC Sugeeshwara
பொறி. எஸ்.பி.சி. சுகீஷ்வர
நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியல்)
+94-11-2581636
+94-71-8566923
+94-11-2581636
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.