குறிக்கோள்கள்

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்மயியல் ஆராய்ச்சி ஆய்வுகூடம், நீர்மயியல் மாதிரி ஆய்வுகளையும், வெளிக்கள ஆய்வுகளையும் நீர்ப்பாசன திணைக்களத்திற்காக மேற்கொள்ளுகிறது. அத்தோடு, இக் கிளை ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதோடு, இக் கிளை நாடளாவிய ரீதியில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நில அளவை கருவிகளைப் பழுதுபார்க்கும் பணிகளையும் பராமரிக்கும் பணிகளையும் ஏற்றுக்கொள்ளுகிறது.

செயற்பாடுகள்

  • அளவீட்டு உபகரணங்களையும் விஞ்ஞான உபகரணங்களையும் பொருத்துதல் உட்பட நீர்மயியல் மாதிரிகளை நிர்மாணித்தல் மற்றும் மாதிரி பரிசோதனைகளை நடத்துதல், பரிசோதனை முடிவுகளை அட்டவணைப்படுத்துதல் மற்றும் வரைபடங்களையும் அறிக்கைகளையும் தயாரித்தல்.
  • கோருகின்ற பட்சத்தில் நீர்மயியல் பற்றிய பிரச்சினைகளுக்கு தொழில்நுடப் பரிந்துரைகளையும் கருத்துக்களையும் வழங்குவதற்கு கள பரிசாதனையை மேற்கொள்ளுதல்.
  • பாய்வு அளவீடுகளுக்காக அளவீட்டு கருவிகளை உருவாக்குதல், பொருத்துதல் மற்றும் அவற்றின் திறனைப் பரிசோதித்தல்.
  • கால்வாய் விநியோக முறைமையில் வெடிப்புகளில் நீர் கசிவை ஆராய்தல்.
  • துருசு வழி நீர் வெளியேறும் அளவு திருத்தம் செய்தல் மற்றும் மதிப்பீட்டு வரைபு வளையினை உருவாக்குதல்.
  • கண்காட்சி மாதிரிகளைத் தயாரித்தல் மற்றும் கண்காட்சிகளில் கலந்துகொள்ளுதல்.
  • இறுதி வருட பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் இறுதி ஆண்டு கருத்திட்ட பணிகளுக்கு உதவுதல்.
  • நாடளாவிய ரீதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நில அளவை உபகரணங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் சேவை செய்தல்.