குறிக்கோள்கள்

இந்தக் கிளை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து சூழலியல் விடயங்களைக் கையாள்கிறது.

செயற்பாடுகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற அனைத்து கருத்திட்டங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து அல்லது கருத்திட்டங்களை அங்கீகரிக்கும் முகவர் நிலையத்திலிருந்து சூழலியல் அங்கீகாரத்தைப் (EIA/IEE) பெற்றுக்கொள்ளுவது பிரதான பொறுப்பாகும். அவற்றுடன் பின்வரும் பணிகளும் இந்தக் கிளையின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

  • நெடுஞ்சாலை கருத்திட்டங்கள், சிறிய நீர் மின்சார கருத்திட்டங்கள், கைத்தொழில் காணி மீட்டல், விடுதி, உல்லாச போக்கிட கருத்திட்டங்கள், குடி நீர் கருத்திட்டங்கள், புகையிரத பாதை கருத்திட்டங்கள், மின்சக்தி ஊடுகடத்தி கருத்திட்டங்கள் போன்ற அரசாங்க மற்றும் தனியார் துறைகளினால் கையாளப்படுகின்ற கருத்திட்டங்களுக்குத் தேவைப்பட்டால் நீர்ப்பாசன திணைக்கள இசைவுச் சான்றிதழகள் வழங்குதல்.
  • தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு (TEC) அங்கத்தவர் என்ற வகையில் நீர்ப்பாசன திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பு (EIA/IEE) அறிக்கைகளையும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு கூட்டங்களையும் மீளாய்வு செய்தல் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் ஏனைய கருத்திட்டங்களை அங்கீகரிக்கும் முகவர் நிலையங்க்ளுக்கும் / விமர்சனங்களை முன்வைத்தல் / பரிந்துரைகளை / கருத்துக்களை முனவைத்தல்.
  • நீர்ப்பாசன கருத்திட்டங்களில் சூழலியல் விடயங்களில் கலந்துகொள்ளுதல்.
  • நீர்ப்பாசன திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் துறை மற்றும் அரசாங்க கருத்திட்டங்களின் சூழலியல் வேலைகளைக் கண்காணித்தல்.
  • ஆற்று மணல் அகற்றுதல் மற்றும் நில மணல் அகற்றுதல் போன்றவற்றிற்கு பரிந்துரை கடிதங்களையும் சம்மத கடிதங்களையும் வழங்குதல்.
  • நீர்ப்பாசன குளங்களில் வண்டல் மண் அகற்றுவதற்கு பரிந்துரைகளை வழங்குதல்.

பிரிவுத் தலைவர்

Dm Women
 
எந்திரி. திருமதி.ஷிரோமி வீரரத்ன
பிரதான பொறியாளர் (சூழலியல் கற்கைகள் )
Office         : +94 112 581 783
Mobile        : +94 759 790 400
Fax             : +94 112 581 783
e mail          : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.