Directors officeஅம்பாறை நீர்ப்பாசனப் பிரதேசம் முழுமையாக அம்பாறை நிர்வாக மாவட்டத்தைக் கொண்டுள்ளது. பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிகளை மேற்கொள்வதற்காக ஆறு நீர்ப்பாசன பொறியாளர் பிரிவுகள் அமைந்துள்ளன. இப்பிரிவுகள் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பத்து, பொத்துவில் மற்றும் மஹாஓயா ஆகியனவாகும். இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் மேற்பார்வையின் கீழ் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் பிரிவுகள் மேலும் பல நீர்ப்பாசன அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயச் சமூகத்தினருக்குப் பராமரிப்புச் செயற்பாடுகளை திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த பிராந்திய நீர்ப்பாசனப் பகுதியின் மொத்த நீர்ப்பாசனப் பகுதி 156,484 ac. இது 18 நீர்ப்பாசனத் திட்டங்களில் உள்ளது. இந்த நாட்டின் மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான கல் ஓயா நீர்ப்பாசன அமைப்பு இந்த நீர்ப்பாசனப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் மொத்த பரப்பளவில் சுமார் 15% அதவது 120,253 ac நீர்ப்பாசனப் பரப்பை உள்ளடக்கியது.

திட்டப் பட்டியல்

பிரிவுத் தலைவர்

Dm Man
(பொறி.) எச்.பி.பி. பண்டார
+94 632 222 171
+94 718 034 660
+94 632 224 061
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிராந்திய வரைபடம்

Ampara Region Map

பட தொகுப்பு